செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் காது வலி நீங்க

காது வலி நீங்க

1 minutes read

காது மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. உள்ளே, நடுவில், வெளியே என்று மூன்று பிரிவுகள் காதிற்கு உண்டு. இதில் நோய் தொற்றுகள், டான்சில் என்னும் சதை வளர்ச்சி, சைனஸ் போன்றவற்றாலும் பிரச்சனைகள் காதில் ஏற்படுவதற்கு பெரும்பாலான வாய்ப்புகள் உண்டாகிறது.

கழுத்தில் இருக்கும் எலும்பு தேய்மானம் அடைந்தாலும் காதிற்கு தொந்தரவுகள் ஏற்படும். இப்படி பல்வேறு பிரச்சினைகளால் ஏற்படக்கூடிய காது தொடர்பான தொந்தரவுகளை நம் வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்து எளிதாக குணப்படுத்தி விடலாம். பொதுவாக காது பிரச்சனை இருப்பவர்கள் பட்ஸ் போன்றவற்றை பயன்படுத்துவது உண்டு.

எந்த காரணங்கள் கொண்டும் பட்ஸை உபயோகப்படுத்தக்கூடாது. இது மேலும் மேலும் தொந்தரவை ஏற்படுத்துமே தவிர, வலியை குறைக்க போவது கிடையாது.

ஒருமுறை பட்ஸ் பயன்படுத்த ஆரம்பித்து விட்டால், அதிலிருந்து மீளுவது என்பது சிரமம் ஆகிவிடும். அதுவே உங்களுடைய காதுக்கு ஆபத்தாகவும் முடிய கூடும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

காதில் வலி இருந்தால் பலரும் தேங்காய் எண்ணெயை ஊற்றுவார்கள். லேசான காது வலிக்கு மல்லிகை எண்ணெயை ஊற்றினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக வீட்டில் இருக்கும் ரெண்டு நாட்டு பூண்டை இடித்து சாறு எடுத்து இரண்டு சொட்டு அளவிற்கு காதுக்கு உள்ளே போகும்படி விட்டுப் பாருங்கள், அரை மணி நேரத்தில் அசைக்காமல் அப்படியே வைத்திருந்தால் காது வலி மெல்ல மெல்ல குறை ஆரம்பித்து விடும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.