செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தொழிலதிபர் அனில் அம்பானி மீது தேசியப் புலனாய்வு துறை விசாரணை!

தொழிலதிபர் அனில் அம்பானி மீது தேசியப் புலனாய்வு துறை விசாரணை!

1 minutes read

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி மீது புகார் கொடுத்துள்ளது.

SBI வங்கிக்கு 2,929 கோடி இந்திய ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தொழிலதிபர் அனில் அம்பானி மீது தேசியப் புலனாய்வுத் துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.

SBI கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அனில் அம்பானி மறுப்பு தெரிவித்துள்ளார்.

மின்சாரம் முதல் தற்காப்பு வரை பல துறைகளில் அனில் அம்பானிக்கு நிறுவனங்கள் உள்ளன. நிறுத்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனமான Reliance Communications நிறுவனமும் அவற்றுள் ஒன்று.

அந்த நிறுவனம் வங்கிக் கடன்களைத் தவறாகப் பயன்படுத்தியதாக SBI புகார் செய்துள்ளது. கடன் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படுகிறது.

இதனால் சுமார் 30 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக SBI வங்கி கூறுகிறது. வங்கி கொடுத்துள்ள புகார் ஆழமாக விசாரிக்கப்படும் என்று மத்தியப் புலனாய்வுத் துறை கூறியது.

Reliance Communications நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களிலும் அனில் அம்பானியின் மும்பை வீட்டிலும் புலனாய்வுத் துறை சோதனை நடத்தியது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.