செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா எனது உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டும்: வைகோ

எனது உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டும்: வைகோ

1 minutes read

எனது உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டுமென ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி நடைபெறுகிறது.

இதனால் மாநாடு நடைபெறும் இடத்தை சென்று பார்வையிட்ட வைகோ  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எனது உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டும். அதற்கான வலிமையை தாருங்கள் என்று அண்ணாவிடம் பிரார்த்தனை செய்துவிட்டே இந்த இடத்தினை பார்வையிடுவற்கு வந்தேன்.

நான் காஷ்மீர் பிரச்சினையில் 30 சதவீதம் காங்கிரஸினையும் 70 சதவீதம் பா.ஜ.க.வையும் தாக்கி பேசி இருக்கிறேன். இந்தியா தனது 100ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கின்றது.

மேலும் அன்றையத் தினம், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது என்று வரலாறு எழுதப் போகிறது. புதை மணலில் இந்தியாவை கொண்டுச் சென்று, சிக்க வைத்து விட்டார்கள்” என வைகோ தெரிவித்துள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.