செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் வாழைப்பூ மகத்துவம் .

வாழைப்பூ மகத்துவம் .

2 minutes read

 இயற்கை மருத்துவத்தில் ஒன்று நாம் எடுக்கும் உணவுகள் ஆகும் .அப்படி வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் பெறும் நன்மைகள்

முக்கனிகளுக்கு ஒன்றான வாழையின் அனைத்துப் பகுதிகளும் பெரிதும் பயனுள்ளதாக உள்ளன. அதில் வாழைப்பழம், வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்துமே சாப்பிடுவதற்கு உகந்ததாக இருப்பதோடு, ஒவ்வொன்றிலும் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன.

இ ப்போது நாம் அதில் வாழைப்பூவின் மகிமைகள் குறித்து தான் பார்க்கப் போகிறோம். பொதுவாக வாழைப்பூவை அதிகம் வாங்கி சமைக்கமாட்டார்கள். ஏனெனில் இதனை சுத்தம் செய்ய நீண்ட நேரம் ஆகும் என்பதால் தான். ஆனால் உண்மையில் இதனை அடிக்கடி சமைத்து உட்கொள்வது மிகவும் நல்லது.

வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் பெறும் நன்மைகள் பார்ப்போம்

வயிறு பிரச்சனைகள் நீங்கும் :-

வாழைப்பழத்தைப் போன்றே வாழைப்பூவிலும் நார்ச்சத்து வளமான அளவில் நிறைந்துள்ளது. இதனால் இவற்றை உணவில் அடிக்கடி சேர்க்கும் போது, செரிமான பிரச்சனைகள், குடலியக்க பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்றவை தடுக்கப்படும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் :-

வாழைப்பூவில் பாலிஃபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள செல்களைப் பாதிக்கும் ப்ரீ-ராடிக்கல்களில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.

நீரிழிவு :-

வாழைப்பூவில் கிளைசீமிக்-இன்டெக்ஸ் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாகவும்உள்ளதால், இவை இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரித்து, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் பராமரிக்க உதவும்.

வயிற்றுப் போக்கு :-

வாழைப்பூ வயிற்றுப் போக்கை குணமாக்க உதவும்

மாதவிடாய் பிரச்சனைகள் :-

வாழைப்பூவை உட்கொண்டு வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்சனைக்கு நல்ல சிகிச்சையாக இருக்கும்.

இரத்த சோகை :-

உணவில் வாழைப்பூவை அதிகம் சேர்த்து வருவதன் மூலம், உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம். ஆகவே உங்களுக்கு இரத்த சோகை இருப்பின் வாழைப்பூவை உணவில் சேர்த்து வாருங்கள்.

மனநிலையை மேம்படுத்தும் :-

வாழைப்பூவில் உள்ள மக்னீசியம், மனக்கவலையைக் குறைத்து, மன நிலையை மேம்படுத்தும். ஆகவே உங்களுக்கு மனம் சரியில்லையெனில், வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.

தாய்ப்பால் அதிகரிக்கும் :-

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு போதிய அளவில் தாய்ப்பால் உற்பத்தி ஆகவில்லை என்றால், வாழைப்பூவை உணவில் அடிக்கடி சேர்த்து வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்

முக்கனிகளுக்கு ஒன்றான வாழையின் அனைத்துப் பகுதிகளும் பெரிதும் பயனுள்ளதாக உள்ளன. அதில் வாழைப்பழம், வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்துமே சாப்பிடுவதற்கு உகந்ததாக இருப்பதோடு, ஒவ்வொன்றிலும் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன.

ப்போது நாம் அதில் வாழைப்பூவின் மகிமைகள் குறித்து தான் பார்க்கப் போகிறோம். பொதுவாக வாழைப்பூவை அதிகம் வாங்கி சமைக்கமாட்டார்கள். ஏனெனில் இதனை சுத்தம் செய்ய நீண்ட நேரம் ஆகும் என்பதால் தான். ஆனால் உண்மையில் இதனை அடிக்கடி சமைத்து உட்கொள்வது மிகவும் நல்லது.

வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் பெறும் நன்மைகள்!

வயிறு பிரச்சனைகள் நீங்கும் :-

வாழைப்பழத்தைப் போன்றே வாழைப்பூவிலும் நார்ச்சத்து வளமான அளவில் நிறைந்துள்ளது. இதனால் இவற்றை உணவில் அடிக்கடி சேர்க்கும் போது, செரிமான பிரச்சனைகள், குடலியக்க பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்றவை தடுக்கப்படும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் :-

வாழைப்பூவில் பாலிஃபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள செல்களைப் பாதிக்கும் ப்ரீ-ராடிக்கல்களில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.

நீரிழிவு :-

வாழைப்பூவில் கிளைசீமிக்-இன்டெக்ஸ் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாகவும்உள்ளதால், இவை இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரித்து, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் பராமரிக்க உதவும்.

வயிற்றுப் போக்கு :-

வாழைப்பூ வயிற்றுப் போக்கை குணமாக்க உதவும்

மாதவிடாய் பிரச்சனைகள் :-

வாழைப்பூவை உட்கொண்டு வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்சனைக்கு நல்ல சிகிச்சையாக இருக்கும்.

இரத்த சோகை :-

உணவில் வாழைப்பூவை அதிகம் சேர்த்து வருவதன் மூலம், உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம். ஆகவே உங்களுக்கு இரத்த சோகை இருப்பின் வாழைப்பூவை உணவில் சேர்த்து வாருங்கள்.

மனநிலையை மேம்படுத்தும் :-

வாழைப்பூவில் உள்ள மக்னீசியம், மனக்கவலையைக் குறைத்து, மன நிலையை மேம்படுத்தும். ஆகவே உங்களுக்கு மனம் சரியில்லையெனில், வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.

தாய்ப்பால் அதிகரிக்கும் :-

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு போதிய அளவில் தாய்ப்பால் உற்பத்தி ஆகவில்லை என்றால், வாழைப்பூவை உணவில் அடிக்கடி சேர்த்து வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.