செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஐரோப்பா கொரோனா பாதிப்பால் கால்பந்து பயிற்சிவிப்பாளர் உயிரிழப்பு!!!

கொரோனா பாதிப்பால் கால்பந்து பயிற்சிவிப்பாளர் உயிரிழப்பு!!!

0 minutes read
ஸ்பெயின் நாட்டின் மலகாவை தளமாகக் கொண்ட அட்லெடிகோ போர்டடா ஆல்டாவின் ஜூனியர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக பிரான்சிஸ்கோ கார்சியா (21) என்பவர் நிர்வகித்து வந்தார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன் கடுமையான கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு பல்வேறு சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதில் இறுதியாக கொரோனா வைரஸின் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அத்தோடு  அவருக்கு  ரத்த புற்றுநோயும் இருப்பதை வைத்தியர்கள் கண்டறிந்தனர்.
இந்நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமையியன்று உயிரிழந்துவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இளம் வயது மற்றும் மலகா பிராந்தியத்தில் இந்த வைரஸால்  இறக்கும் 5வது நபராகும்.
கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வரை, அவர் தனக்கு புற்றுநோய் இருப்பது பற்றியும் அறிந்திருக்கவில்லை. முன்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என வைத்தியர்கள் கூறியுள்ளார்கள்.
வணக்கம் லண்டனுக்காக – ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.