நடிகை நஸ்ரியா நசீம் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் மணிரத்னம் என்ற பெயரில் தயாராகும் மலையாளப் படத்தில் பகத்திற்கு ஜோடியாக நஸ்ரியா நடிப்பதாக இருந்தது.
இதனை சந்தோஷ் நாயர் இயக்குகிறார். நஸ்ரியாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் இந்தப் படத்தில் இருந்து அவர் விலகிக் கொண்டார். அதனால் நஸ்ரியாவுக்கு பதில் நிவேதா நடிக்கிறார்.
இதுபற்றி இயக்குனர் சந்தோஷ் நாயர் கூறியிருப்பதாது: சமூகத்துக்காக போராடும் ஒரு பெண்ணின் கதை. அந்த கதைக்கு நஸ்ரியா பொருத்தமாக இருப்பார் என்பதற்காக அவரை ஒப்பந்தம் செய்திருந்தோம்.
அவரது திருமணம் நெருங்குவதால் அவரால் தேதி ஒதுக்கித் தரமுடியவில்லை. அதனால் நிவேதாவை நடிக்க வைக்கிறோம். அவரும் இந்த கேரக்டருக்கு பொருத்தமானவர்தான் என்கிறார்