September 27, 2023 12:20 pm

நடிகை அமலா மீண்டும் நடிக்கிறார்.நடிகை அமலா மீண்டும் நடிக்கிறார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நடிகை அமலா 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார்.

1980 மற்றும் 90–களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அமலா. இவர் நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடின.

ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், போன்றோருடன் நடித்துள்ளார். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

தற்போது பிராணிகள் பாதுகாப்பு அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தும் ஏற்கவில்லை. ஆனால் இப்போது தமிழில் தயாராகும் டி.வி. தொடர் ஒன்றில் நடிக்கிறார்.

இதுகுறித்து அமலா கூறும்போது, ‘‘கதை எனக்கு பிடித்து இருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். சென்னை எனக்கு மிகவும் பிடித்த நகரம். சினிமாவில் நடிப்பது பற்றி உடனடியாக முடிவு எதுவும் எடுக்கவில்லை. அதற்கு சில காலம். ஆகலாம்’’ என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்