பழங்களில் அதிகமா சத்துகள் இருப்பதால், குழந்தைகளுக்கு பழத்து¬ன் தயிர் சேர்த்து பழ தயிர் பச்சடி செய்து கொடுக்கலாம். இது , குழந்தைகளுக்கு ஆரோக்கியம் மட்டும் அல்ல, குழந்தைகளின் வயிறும் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும்.
தேவையான பொருட்கள் :
நறுக்கிய ஆப்பிள் – கால் கப்
நறுக்கிய அன்னாசி பழம் – கால் கப்
நறுக்கிய பேரீச்சம் பழம் – 10
உலர் திராட்சை – 10
நாட்டு சர்க்கரை – தேவைக்கு
காய்ச்சிய பால் – கால் கப்
தயிர் – அரை கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
லவங்கத்தூள் – சிறிதளவு
தேன் – 1 மேசைக்கரண்டி
உப்பு – சிறிதளவு
செய்முறை:
அகன்ற பாத்திரத்தில் அன்னாசி பழம், ஆப்பிள், உலர் திராட்சை, பேரீச்சம் பழம் ஆகியவற்றை ஒன்றாக போட்டு கிளறவும்.பிறகு நாட்டு சர்க்கரை, பால், தயிர் போன்றவற்றை கலக்கவும்.அதைத்தொடர்ந்து தேன், ஏலக்காய் தூள், லவங்கத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து பரிமாறலாம்.சூப்பரான பழ தயிர் பச்சடி தயாராகிவிடும்.
நன்றி பெமினா