கற்றாழை கலந்தாலே

யோகர்ட் + Aloe Vera

இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல், ஒரு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி தேனை ஒன்றாக கலந்து அக்கலவையினை தலைமுடியின் வேர் பகுதியிலிருந்து முனைகள் வரை தடவவும். 10-15 நிமிடங்கள் வரை இந்தக் கலவையை மண்டையோட்டின் மீது நன்றாக மசாஜ் செய்து 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடவும். இதைத் தொடர்ந்து ஒரு மிதமான ஷம்பூவை கொண்டு தலைமுடியை நன்றாக நீரில் அலசவும். உங்களது தலைமுடி புதுப்பொலிவுடன் பளபளப்பதை காணவும்.

விளக்கெண்ணெய் + Aloe Vera

ஒரு கப் அலோவேரா ஜெல், இரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் இரு தேக்கரண்டி வெந்தய பவுடர் சேர்த்துப் பசையாக கலக்கவும். உங்களது தலைமுடியின் வேர் பகுதியிலிருந்து அதன் முனைகள் வரை இந்த மாஸ்க்கை தடவவும். ஒரு ஷவர் கேப்-ஐ கொண்டு உங்களது தலைமுடியை இறுக்கமாக கட்டவும். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். காலையில் இளம் சூடான வெந்நீரில் இந்தப் பசையை அலசி அகற்றவும். இதை தொடர்ந்து செய்து வருவது, ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கு உத்வேகமளிக்க உதவுகிறது.

முட்டை + Aloe Vera

உங்களது தலைமுடியை வலுவாக்கவும் மற்றும் உடைவதிலிருந்து அதை பாதுகாக்கவும் முட்டையும் வெள்ளைக்கருவும் மற்றும் அலோ வேராவும் மிக பொருத்தமான கலவையாகும். இரு முட்டைகளின் வெள்ளைக்கருவையும், இரண்டு தேக்கரண்டி அலோவேரா ஜெல் மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கலக்கவும். இந்தக் கலவையை உங்களது மண்டையோட்டின் மீது தடவி 5 முதல் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். ஒரு ஷவர் கேப்பை கொண்டு உங்களது தலைமுடியை இறுக்கமாக கட்டவும். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். காலையில் வழக்கமான தண்ணீரை கொண்டு தலைமுடியை அலசவும். ஒரு வாரத்தில் இரண்டு முறை இந்த மாஸ்க்கை பயன்படுத்துவது உங்களது தலைமுடி வலுவுடன் உறுதியாக்க உதவும்.

தேங்காய் எண்ணெய் + Aloe Vera

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அலோவேரா ஜெல், இரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் இரு தேக்கரண்டி தேனை சேர்த்து நன்றாக கலக்கவும். இதனை மண்டையோட்டின் மீதும் மற்றும் தலைமுடியின் மீதும் நன்கு தடவவும். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை இளம் சூடான டவலை கொண்டு தலைமுடியை சுற்றி மூடவும். மிதமான ஷம்பூவை பயன்படுத்தி தலைமுடியை அலசவும். தலைமுடி வறட்சி அடைவதிலிருந்தும் மற்றும் சுருள்வதிலிருந்தும் தடுக்க இது உதவும்.

நன்றி | வீரகேசரி

ஆசிரியர்