December 7, 2023 2:46 am

கவிதை | பிறப்பு | யாதவிகவிதை | பிறப்பு | யாதவி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வண்ணப்  பட்டுக் குட்டி நான்

வாசமுள்ள பூவும் நான்

கண்ணைத் திறந்து பார்க்கின்றேன்

காணும் உலகும் அழகுதான்

 

 

நிலவும் வானும் என்னோடு

நிறையப் பேசும் காலம் வரும்

உலவும் தென்றல் காற்று வந்து

உறங்கச் சொல்லும் நேரம் வரும்

 

என்னை நானே உங்களுக்கு

இதமாய் அறிமுகம் செய்கின்றேன்

யாதவி என்பது என் பெயர்தான்

யாவருக்கும் இனிமை ஆனவள்தான்

 

அம்மா அப்பா அக்காவோடு

அருமைச் சொந்தம் நிறையத்தான்

அனைவர் பெயரும் விரைவினிலே

ஆசையாய் கற்று சொல்லிடுவேன்

 

–  யாதவி –

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்