செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா வண்ணநிலவன் தமிழின் பெருமிதம்..

வண்ணநிலவன் தமிழின் பெருமிதம்..

1 minutes read

கொடிசியா பப்பாசி அமைப்புடன் இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா ஜூலை 19 முதல் 28ம் தேதி வரை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டிற்கான விருது எஸ்தர், கடல்புரத்தில், ரெயீனிஸ் அய்யர் தெரு, கம்பாநதி உள்ளிட்ட புகழ்மிக்க பல நூல்களின் ஆசிரியரான எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு வழங்கப்பட்டது. இவ்விருது வாழ்த்துப் பட்டயமும் ஒரு லட்சம் ரூபாயும் உள்ளடக்கியது.

விருதினை வழங்கி வாழ்த்துரை வழங்கிய கலாப்ரியா பேசும்போது, “வண்ணநிலவனை வாழ்த்திப் பேச என்னை விட பொருத்தமானவர் எங்களின் அண்ணனாகிய வண்ணதாசன் அவர்கள்தான். கொங்கு மண்டலம் எப்போதும் கலைஞர்களைக் கொண்டாடுவதில் முதன்மையாகத் திகழ்கிறது.

வண்ணநிலவனுக்கு இந்த விருது அளிக்கப்பட்டது திருநெல்வேலிக்காரர்களுக்குப் பெருமையான தருணம். மண்சார்ந்த வாழ்க்கைசார்ந்த கதைகளைத் தீவிரமான நடையில் எழுதியவர் வண்ணநிலவன். அவர் இந்த விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவர்.

வண்ணநிலவன் தன் இலக்கிய சாதனைகளைப் பெரிதாக கருதிக்கொள்பவர் அல்ல. தனது எழுத்தின் பலத்தை அவர் உணர்ந்ததே இல்லை. அசோகமித்திரன், ஜானகிராமன் போன்ற எழுத்துலக ஜாம்பவான்கள் அவரது கடல்புரத்தில் நாவலால் ஈர்க்கப்பட்டார்கள். என்றும் வாழும் கதாபாத்திரங்களான எஸ்தர், பிலோமினா ஆகியோரால் தமிழ்வாசகர்கள் ஈர்க்கப்பட்டார்கள் என்றார்.

விருதினைப் பெற்றுக்கொண்ட வண்ணநிலவன் ஏற்புரை வழங்கினார். எழுத்தாளர்களை கெளரவிக்கும் கொடிசியாவிற்கும் வாசகர்களுக்கு நன்றி கூறினார்.

நிகழ்வில் எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், வண்ணதாசன், சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொடிசியாவின் நிர்வாகிகள் ராமமூர்த்தி, விஜய் ஆனந்த், தேவராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.