Wednesday, February 24, 2021

இதையும் படிங்க

கவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா!

நூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...

தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும் முருகபூபதி

“ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா…? “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி.எனக்கு ‘ஜமாத் ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “இவ்வாறு...

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாச காலமானார்!

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரான எட்வின் ஆரியதாச காலமானார்.  இவர், தனது 98வது வயதில் காலமாகியுள்ளார். இவரின் மறைவு இலங்கை கலைஞர்கள், மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை...

16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை!

16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...

சந்தியாராகத்தின் கவிதைச்சரம் – 2021 | மூத்தோரின் அசத்தல் கவிதைகள்

கனடா விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் சந்தியாராகம் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிதைச்சரம் நிகழ்வு நேற்று மாலை (01. 10. 2021) நடைபெற்றது.

திருகோணமலையில் சோழர் | டாக்டர் ஜீவராஜின் புதிய நூல்

இலங்கையில் சோழர்களது 77 வருட கால ஆட்சியில் அவர்களது தலைநகரமாக பொலன்னறுவை என்கின்ற ஜனநாதமங்கலம் இருந்தபோதிலும் அவர்களது செயற்பாட்டுப் பிரதேசமாக திருகோணமலையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. திருகோணமலையில்...

ஆசிரியர்

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்!

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கிய மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்.

இவர் நேற்று (புதன்கிழமை) மாலை கொழும்பில் காலமாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மா சோமகாந்தன், பெண்கள் தொடர்பாக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்ததுடன் எழுத்து ஆளுமையாலும் பல விடயங்களை சமூகத்திற்கு எடுத்துரைந்த எழுத்தாளர் ஆவார்.

இவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது பிரிவுத் துயர் தொடர்பில் எழுத்தாளர் ஞானசேகரன் எழுதிய பதிவு

திருமதி பத்மா சோமகாந்தன் எமது உறவினர். அவர் அமரத்துவம் அடைந்த அன்று காலையும் அரைமணிநேரம் அவருடன் தொலைபேசியில் கதைத்தேன். அவரது பிரவு எமக்குப் பெரிதும் அதிர்ச்சியைத்தருகிறது. அவர் சிரேஷ்ட தராதர வகுப்பில் படிக்கும்போது எஸ்.டி. சிவநாயகத்தை ஆசிரியராகக்கொண்ட சுதந்திரன் பத்திரிகை 1951இல் ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தியது. இதுவே இலங்கையின் முதலாவது சிறுகதைப் போட்டியாகக் கருதப்படுகிறது. அந்தப்போட்டிக்கு இவர் ‘இரத்தபாசம்’ என்ற கதையை அனுப்பிவைத்தார். அக்கதை முதற்பரிசினைப் பெற்றுக் கொண்டது. அந்தப் போட்டியில் இவர் ‘புதுமைப்பிரியை’ என்ற புனைபெயரில் பங்குபற்றியிருந்தார். பரிசுபெற்ற முதற்சிறு கதைமூலம் படைப்பு இலக்கிய உலகில் பிவேசித்தவர் பத்மா. இந்தப்போட்டியில் டானியல் இரண்டாம் பரிசினையும் டொமினிக் ஜீவா மூன்றாம் பரிசினையும் பெற்றனர்.

கடவுளின் பூக்கள், வேள்வி மலர்கள், புதிய வார்ப்புகள், கரும்பலகைக்காப்பியங்கள், இற்றைத்திங்கள் முதலான சிறுகதைத்தொகுப்பு களை வரவாக்கியிருக்கும் இவர், இந்நூல்களுக்காக தமிழ் நாடு லில்லி தேவசிகாமணி பரிசு, சென்னை இந்து நாளிதழின் பாராட்டு, சார்க் மகளிர் சங்கத்தின் பரிசு, வடக்கு – கிழக்கு மாகாண அமைச்சின் சாகித்திய பரிசு பெற்றிருப்பவர்.

இவைதவிர ‘ஈழத்து மாண்புறு மகளிர்’ பற்றிய நூலை 2002இல் எழுதி வெளியிட்டுள்ளார். ஈழத்து தமிழ்ப்பெண் ஆளுமைகள் என்ற நூலையும் வரவாக்கியிருக்கிறார். சிறுவர் இலக்கியமும் படைத்திருக்கும் பத்மா, சிறுவர்களுக்காக ‘அனுமான் கதை’ என்ற நூலையும் தந்திருக்கிறார். உலகப் புகழ்பெற்ற சுவாமி சின்மயானந்தரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார். திருமதி பத்மா ஒரு பெண்ணியச் சிந்தனையாளர் பெண்ணின் குரல் சஞ்சிகைக்கு ஆசிரியராகப்பணிபுரிந்துள்ளார். ஊடகத்துறையில் கடமையாற்றும் பெண்களின் ஆளுமையை வலுப்படுத்தவும் அவர்களின் நன்மைகளைக் கவனிப்பதற்குமாக இயங்கிய ‘ஊடறு’ என்ற அமைக்குத் தலைமைதாங்கி சிலகாலம் வழிநடத்தியுள்ளார்.

திருமதி பத்மா ஆங்கிலத்திலும் எழுதும் திறன்வாய்ந்தவர். உலகெங்கும் பரவிவாழும் தமிழ் மக்களின் பிள்ளைகள் தமிழ் மொழியை வாசிக்கத் தெரியாமல் இருக்கிறார்கள் அவர்கள் தமிழ்ப் பண்பாட்டையும் சமய நெறிகளையுமாவது தெரிந்திருக்கவேண்டும் எனக்கருதி அவர்களுக்காக Stories from Hindu Mythology என்ற நூலை எழுதியிருக்கிறார். அவரது ஆத்மா சாந்தி அடைவதாக. கீழே உள்ள படம் ஆசி.கந்தராஜாவின் நூல் வௌியீட்டில் பத்மா மகிழ்ச்சியாக இருந்த தருணம். இப்படத்தை ஆசி கந்தராஜா இன்று மின் அஞ்சலில் அனுப்பி யிருந்தார்.

இதையும் படிங்க

சயந்தனின் ‘அஷேரா’ நாவல் | யூட் பிரகாஷ்

ஆறாவடு. ஆதிரை, வரிசையில் வாசிக்கும் சயந்தனின் மூன்றாவது நாவல் தான் அஷேரா. யூதர்களின் ஒற்றைக் கடவுளான யாஹ்வேயிற்கு ஒரு...

காதலர் தினம் பற்றி எழுத்தாளர் சுஜாதா எழுதிய குறிப்பு!

40 லட்சம் வருஷங்களுக்கு முன் ஆப்பிரிக்கச் சமவெளிப் பகுதியில் காதல் பிறந்தது என்கிறார்கள். அப்போதுதான் மூளையில் இருந்து முதல் நியூரோ கெமிக்கல்கள் மனித ரத்தத்தில் பாய்ந்து காதலின் காரணத்தால் அசட்டுச்...

காத்திருப்பு | யூட்பிரகாஷ்

வாழ்க்கை என்பதே முதல் காத்திருப்பிற்கும் இறுதி காத்திருப்பிற்கும் இடையில் அனுபவிக்கும் காத்திருப்புக்களின் தொகுப்பு தான். பிறப்பு என்ற முதற்...

சயந்தனின் ‘ஆதிரை’ | நாவல் விமர்சனம் | ரூபன் சிவராஜா

சயந்தனின் 2வது நாவல் ஆதிரை அண்மையில் வாசித்தேன். 2015இல் வெளிவந்த நாவல். 664 பக்கங்கள். மலையக மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளைப் பேசுவதனூடு கதை தொடங்குகின்றது. 1977 கலவரத்தினை அடுத்து வன்னிக்குச்...

ஈழ எழுத்தாளர் டொமினிக் ஜீவா காலமானார்

“மல்லிகை” ஆசிரியர் டொமினிக் ஜீவா தனது 94வது வயதில் இன்று 28.01.2021 மாலை காலமானார். டொமினிக் ஜீவா...

மீண்டும் சிரித்திரன் இதழ்!

ஈழத்து இதழியல் வரலாற்றில் மிக முக்கியமான இதழாக வெளிவந்தது சிரித்திரன் இதழ். சிரித்திரன் சுந்தர் எனப்பட்ட திரு. சி. சிவஞானசுந்தரம் நடாத்திய இந்த இதழ் மீண்டும் வெளியாக உள்ளது.

தொடர்புச் செய்திகள்

இப்படி ஓர் எதிரொலியா.. | சிறுகதை | தேவகி கருணாகரன்

. அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் தேவகி கருணாகரன் அவர்கள் இலக்கிய உலகில் மிகவும் அறியப்பட்ட ஒருவராவார். பல இலக்கிய போட்டிகளில் பல பரிசில்களையும் பெற்றிருக்கின்றார்....

கவிதை | நெஞ்சுக்குள் தரிசனம்! | சண்முக பாரதி

எங்கள் பண்பாட்டின் ஆன்மீக அடையாளமாய் நிமிர்ந்த நல்லூர் முருகா! நின் பெருந்திருவிழா அழகில் நெஞ்சு நிமிரும் நாளுக்காய் காத்திருந்தோம் இன்று நின் தரிசனம் காண அடையாள அட்டை இன்னுமின்னும் பற்பல நிபந்தனைகள் அந்தக் கிருமிக்கு அவ்வளவு வல்லமையா… 650 பேர் சோதனை செய்து 300 பேருக்கு...

தமிழறிஞர் கோவை ஞானி இயற்கை எய்தினார்

கோவையைச் சேர்ந்த தமிழறிஞரும், எழுத்தாளருமான கோவை ஞானி இன்று பிற்பகல் உயிரிழந்தார். அவருக்கு வயது 85. கோவையைச் சேர்ந்தவர் மூத்த தமிழறிஞர் கோவை ஞானி.  கி.பழனிச்சாமி என்ற இயற்பெயர் கொண்ட கோவை ஞானி  தமிழாசிரியராக பணியாற்றி...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கார் விபத்தில் மீண்டும் சிக்கினார் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ்

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு பெரிய கார் விபத்தில் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் காயமடைந்துள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நீதி கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியாவில் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறையலான உணவுதவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியது. இதனையடுத்து...

தரங்கவின் திறமைகள் பல தேசிய வெற்றிகளுக்கு பங்களித்துள்ளன | இலங்கை கிரிக்கெட்

உபுல் தரங்கா தனது தொழில் வாழ்க்கையில் இலங்கை கிரிக்கெட்டுக்கு ஒரு சிறந்த சேவையைச் செய்துள்ளதுடன், அவரது திறமைகள் பல தேசிய அணி வெற்றிகளுக்கு பங்களித்தாக இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக...

மேலும் பதிவுகள்

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தவேண்டும் | இந்து மதத் தலைவர்கள்

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தவேண்டும் எனவும் அதில் சுவிஸ்சர்லாந்துக்கும் பொறுப்பு உண்டு எனவும் சுவிஸ்சர்லாந்து தூதுவரிடம் இந்து மதத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை மீண்டும் முடக்காமல் இருப்பது மக்கள் கைகளில்!

யாழில் மீண்டும் ஒரு முடக்க நிலையினை ஏற்படுத்தாது இருப்பதற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் பாலியல் பொம்மை விவகாரத்தில் சிக்கிய வெளிநாட்டு மாணவர்!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிங்கப்பூர் மாணவர் ஒருவர் குழந்தை பாலியல் தொடர்பான பொம்மை ஒன்றை இறக்குமதி செய்த குற்றத்திற்காகவும் குழந்தைககள் தொடர்பான தகாத புகைப்படங்கள்/ பொருட்கள் வைத்திருந்ததற்காகவும் அவருக்கு 11 மாத...

மூக்குக் கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா தொற்றும் விதம் குறித்த முக்கியத் தகவல்

கொரோனா வைரஸ் தொற்றும் சந்தர்ப்பங்களில், மூக்குக் கண்ணாடி அணியாதவர்களோடு ஒப்பிடுகையில், மூக்குக் கண்ணாடி அணியும் நபர்களுக்கு கொரோனா தொற்றுவதற்கான சாத்தியம் 3 மடங்கு குறைவாக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி போராட்டம் | பருத்தித்துறையில் இளைஞன் ஒருவர் கைது

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த...

தலித் சிறுமிகள் இருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உன்னாவில் 2 தலித் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ்...

பிந்திய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் பாலியல் பொம்மை விவகாரத்தில் சிக்கிய வெளிநாட்டு மாணவர்!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிங்கப்பூர் மாணவர் ஒருவர் குழந்தை பாலியல் தொடர்பான பொம்மை ஒன்றை இறக்குமதி செய்த குற்றத்திற்காகவும் குழந்தைககள் தொடர்பான தகாத புகைப்படங்கள்/ பொருட்கள் வைத்திருந்ததற்காகவும் அவருக்கு 11 மாத...

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி!

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சரவையின் இராஜினாமாவை...

மீண்டும் நடிக்க வரும் நதியா!

நடிகை நதியா 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லிங்குசாமி இயக்கும்  திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் ‘பூவே பூச்சூடவா’...

ஸ்ரீதேவியின் சில நினைவுகள் | வைரலாகும் ராம் கோபால் வர்மாவின் கடிதம்!

மறைந்த நடிகர் ஸ்ரீதேவியின் நினைவு தினம் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீதேவி குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா...

ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்தார் மோடி

ஜெயலலிதா தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிகளை மட்டுமல்லாது மிகப்பெரிய தோல்விகளையும் எதிர்கொண்டவர்.  மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின்...

இளம் பெண் சமூக ஆர்வலர் திஷா ரவி விடுதலை

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இளம் பெண் சமூக ஆர்வலர் திஷா ரவி விடுதலையானார். இந்திய மத்திய அரசின் மூன்று விவசாய...

துயர் பகிர்வு