17
உன் அடி வயிரின்
கோடுகள் சொல்லும்
என்னை பிரசவித்த
கஷ்டங்களை
உன்னை எட்டிஉதைத்து
வெளியில் வந்த
அந்த ஒருநொடி சொல்லும்
துன்பத்தின் உச்சத்தை
என் அழுகுரல் கேட்டு
உன் அரவணைப்பும்
முத்தமும் சொல்லும்
நான்தான் உன் உலகம் என்று ….
கருவறை சிப்பியில்
களைந்தெடுத்த முத்து நான்
முத்துக்கு சொந்தமான
சிப்பி நீ மட்டுமே!
நன்றி : தேன்மொழி | கவிதை பூக்கள்
