Wednesday, August 10, 2022

இதையும் படிங்க

வறுத்தபூண்டு சாப்பிடுவதால் ஒரே நாளில் இவ்வளவு நன்மைகளா

பூண்டை வறுத்து சாப்பிட்டால் பல உடல் உபாதைகளும் நீங்கிவிடும். வறுத்தபூண்டு ஆன்ஜியோடென்சின் என்னும் ஹார்மோன் உற்பத்தியைத் தடுக்கும். ரத்தநாளங்களை சீராக்கும். 6 வறுத்த...

சளி நெஞ்சு சளி ஆஸ்துமா வீசிங் மூச்சு ஆகியவற்றிற்கான தீர்வுகள்

காலநிலை மாற்றம் வந்தாலே பலரும் அனுபவிக்கும் ஓர் பிரச்சனை தான் சளி, இருமல். குறிப்பாக குளிர்காலம் அல்லது பனி காலத்தில் தான் இப்பிரச்சனைகளால்...

இருமல், இரைப்பு தொல்லையை குணமாக்கும் தூதுவளை சூப்

தேவையான பொருட்கள் : தூதுவளை இலைகள் - 10. பூண்டு - 5 பல்,

காலையில் தேநீர் எப்படி எடுப்பது சிறந்தது

நீங்கள் தேநீர் இல்லாமல் தங்கள் நாளைத் தொடங்க முடியாத ஒருவராக இருந்தால், வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளைச் சமாளிக்க இந்த எளிய குறிப்புகள் உதவும்.

காலை எழுந்தவுடன் அருந்த கூடியவை

எழுந்தவுடன் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து ஒரு சூடான கப் எலுமிச்சை சாறு குடிக்கலாம். எடை இழப்புக்கு இது ஒரு சிறந்த...

குரங்கு அம்மை பாதிப்பை தடுப்பது எப்படி

உலகமெங்கும் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதன் காரணமாக உலகளாவிய பொது சுகாதார நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.

ஆசிரியர்

கிரியாட்டின் அதிகரித்தால் கிட்னி பாதிக்கும்

கிரியாட்டினை பற்றி எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டும். உங்கள் சிறுநீரகம் சரியாக இயங்கிக்கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் ‘இன்டிகேட்டராக’ கிரியாட்டின் அளவு இருக்கிறது.

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றால், ரத்தத்தில் கிரியாட்டின் எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டறியும் பரிசோதனையை செய்யும்படியும் டாக்டர் பரிந்துரைப்பார். அந்த பரிசோதனைக்கான காரணம் என்ன என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. கிரியாட்டினை பற்றி எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டும். உங்கள் சிறுநீரகம் சரியாக இயங்கிக்கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் ‘இன்டிகேட்டராக’ கிரியாட்டின் அளவு இருக்கிறது.

நமது கிட்னி சீராக இயங்கிக்கொண்டிருந்தால், ரத்தத்தில் கிரியாட்டின் அளவு சரியாக இருக்கும். கிட்னியின் செயல்பாட்டில் ஏதாவது கோளாறு ஏற்படும்போது ரத்தத்தில் கிரியாட்டின் அளவு உயர்ந்துவிடும். அதனால் கிரியாட்டின் அளவு அதிகரிப்பது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கிறது.

உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய ஒருவகை கழிவின் பெயர்தான் கிரியாட்டின். தசை செல்களின் சிதைவில் இருந்து இது உற்பத்தியாகிறது. கிட்னி சீராக இயங்கினால், அதுவே ரத்தத்தில் இருந்து கிரியாட்டினை பிரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றும். இது இயல்பாக நடந்துகொண்டிருக்கும்போது ரத்தத்தில் கிரியாட்டின் அளவு சீராக இருக்கும். இயல்பாக நடக்காவிட்டால் கிரியாட்டின் அளவு உயர்ந்துவிடும்.

கிரியாட்டின் 0.8 முதல்1.4 மில்லி கிராம் வரை இருந்தால் அது சீரான அளவு. சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்போது அதன் அளவு அதிகரித்துவிடும். அசாதாரண அளவுக்கு அதிகரித்துவிட்டால், அது கிட்னி பழுதாகிவிட்டதன் அறிகுறியாக இருக்கும். அதனால்தான் சாதாரணமாக ரத்தத்தை பரிசோதிக்கும்போதெல்லாம் கிரியாட்டின் அளவையும் பரிசோதிக்க டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

உயர் ரத்த அழுத்தத்தை போன்று சிறுநீரக நோயும் நிசப்தமான கொலையாளியாக வர்ணிக்கப்படுகிறது. ஏன்என்றால் தொடக்க நிலையில் இது எந்த அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை. சிறுநீரக பாதிப்பு ஒருவருக்கு ஏற்படுகிறதென்றால் தொடக்கத்திலே அதன் அறிகுறி எதையும் அவரால் உணரமுடியாது. குழந்தைகளுக்கு 2.0 மில்லி கிராமுக்கு அதிகமாகவும், பெரியவர்களுக்கு 5.0 மில்லிகிராமுக்கு அதிகமாகவும் இருந்தால் அவர்களது கிட்னி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

கிட்னியின் இயக்க செயல்பாடு குறையும்போது அதன் அறிகுறிகள் ஆளுக்கு ஆள் மாறுபடும். உடலில் தன்ணீர்த்தன்மை குறையும். சோர்வு, உடல் உறுப்புகளில் வீக்கம், பாதங்களிலும்- முகத்திலும் நீர்கோர்த்தல், சுவாசிப்பதில் தடை ஏற்படுதல், சருமம் கடுமையாக உலர்ந்துபோகுதல், வாந்தி, தலைச்சுற்றுதல் போன்றவை இதன் பெரும்பாலான அறிகுறியாக இருக்கும்.

எந்த பிரச்சினையால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதித்திருந்தாலும் கிரியாட்டின் அளவு அதிகரித்துவிடும். சிறுநீரக பாதிப்பு சமீபத்தில் ஏற்பட்டிருக்கிறதா? வெகுநாட்களாக இருந்துகொண்டிருக்கிறதா? என்பதை பரிசோதித்து தெரிந்துகொள்ளவேண்டும். பாதிப்பு சமீபத்தில் ஏற்பட்டிருந்தால் சிகிச்சை பெற்று அதில் இருந்து மீள்வது எளிது.

சிறுநீரில் புரோட்டினான அல்புமின் அளவு அதிகரிப்பதும் கிட்னியின் இயக்கத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை உணர்த்தும். சிறுநீரில் அல்புமின் அளவு அதிகமாக இருந்தால் உயர் ரத்த அழுத்தத்தினாலோ, நீரிழிவாலோ கிட்னியின் இயக்கம் பாதிக்கப்பட்டிருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் அதை உறுதி செய்யலாம்.

குறிப்பிட்ட சிலவகை மருந்துகளை உட்கொள்ளுதல், சிறுநீரக தொற்று, சிறுநீர் பாதையில் ஏற்படும் தடை, தசைகளில் அதிகமாக ஏற்படும் சிதைவு போன்றவைகளாலும் ரத்தத்தில் கிரியாட்டின் அளவு அதிகரிக்கும். தொடர்ச்சியாக அளவுக்கு அதிகமாக மாமிச உணவுகள் உட்கொண்டாலும் கிரியாட்டின் அளவு கூடும்.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இருப்பவர்களும் பரம்பரை வழியாக கிட்னி நோயால் பாதிக்கப்படுபவர்களும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை ரத்தத்தில் கிரியாட்டின் அளவை பரிசோதிக்கவேண்டும்.

நன்றி | மாலை மலர்

இதையும் படிங்க

தினமும் இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழம் சாப்பிடுங்க

பேரிச்சம் பழத்தில் அதிகளவில் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் வலிமைக்கு இன்மையாதவை. அதோடு இது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. பேரிச்சம் பழத்தை...

சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள்

சிறுநீர்.. பொதுவாக நம்மில் பலர் அடிக்கடி செய்யும் தவறுகளில் ஒன்று தான் சிறுநீரை அடக்குவது. நீண்ட நேரம் சிறுநீர்...

உணவில் தினமும் ரசம் சேர்த்து கொள்வதால் நடக்கும் அற்புதங்கள்

நாம் உண்ணும் உணவில் ரசம் சேர்த்து கொள்வது சுவையை மட்டும் தராது கூடவே உடலுக்கு ஏராளமான சத்துக்களையும் தருகிறது என்பது தெரியுமா? புளிரசம்,...

முடக்கத்தானின் மருத்துவ குணங்கள்

முடக்கத்­தான் ஒரு கொடி வகையைச் சேர்ந்த மருத்துவ மூலிகை கீரையா­கும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது.

கால் விரல் நகம் சொத்தை வருவதற்கான காரணம்

கால் விரல் நகம் சொத்தை விழுவதன் முதல் காரணம், அதிக நேரம் காலணிகள் அணிந்து கொண்டு வேலை பார்ப்பது.

பல்வேறு நோயை தீர்க்கும் தேன் லவங்க பொடி கலவை

தேன் உலக மக்களுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட அமிர்தம் என்றாலும் மறுப்பதற்கில்லை. உலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் அரசன், தேன்...

தொடர்புச் செய்திகள்

தினமும் இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழம் சாப்பிடுங்க

பேரிச்சம் பழத்தில் அதிகளவில் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் வலிமைக்கு இன்மையாதவை. அதோடு இது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. பேரிச்சம் பழத்தை...

சுவடுகள் 26 | காதல் திருவிழா | டாக்டர் ரி. கோபிசங்கர்

சாதகம் பொருந்தீட்டுதாம் அடுத்தது என்ன மாதிரி எண்டு புரோக்கர் கேக்க, “ தம்பி ஒருக்கா பொம்பிளையை பாக்கோணுமாம்“ எண்டு மாப்பிளையின்டை அம்மா சொன்னா....

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

முடக்கத்தானின் மருத்துவ குணங்கள்

முடக்கத்­தான் ஒரு கொடி வகையைச் சேர்ந்த மருத்துவ மூலிகை கீரையா­கும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது.

பெண்களின் கவனத்துக்கு

உண்மையிலேயே இது நல்ல மாற்றம். ஆம். 50 வயதுக்கு மேற்பட்ட தனியாக வசிக்கும் பெண்கள் இப்பொழுது தங்களுக்கு துணை தேவை என திருமண...

ஒரே மாதத்தில் இரண்டுமுறை மாதவிடாயா

பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் ஒவ்வொரு மாதமும் முன், பின் என மாறிவருவது இயல்பு. அதுவே 10 நாட்களுக்கு மேல் தள்ளிப்போதல், ஒரே மாதத்தில்...

மேலும் பதிவுகள்

ஒரே வாரத்தில் முடி பயங்கரமாக வெட்ட வெட்ட வளரனுமா

இன்றைய காலத்தில் நீண்ட நாட்கள் இளமையைத் தக்க வைப்பது என்பது கடினமான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக இளம் வயதிலேயே நரை அல்லது வெள்ளை முடி...

செம்பருத்தி மொய்ஸ்சுரைசர்

தேவையான பொருட்கள்: செம்பருத்திப்பூ தூள் - 2 தேக்கரண்டி ரோஜா பொடி - 1...

கற்றாழை கலந்தாலே

யோகர்ட் + Aloe Vera இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல், ஒரு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி...

சிக்கன் பக்கோடா

தேவையான பொருட்கள் எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம் முட்டை - 1

பாட்டி வைத்தியத்தின் அற்புதங்கள்

பாட்டி வைத்தியத்தின் மகத்துவம்நாம் விஞ்ஞான உலகமான இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இருந்தால் கூட நம்முடைய பழமை வாய்ந்த பாட்டி வைத்தியமான கை வைத்தியத்தியத்தின்...

சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள்

சிறுநீர்.. பொதுவாக நம்மில் பலர் அடிக்கடி செய்யும் தவறுகளில் ஒன்று தான் சிறுநீரை அடக்குவது. நீண்ட நேரம் சிறுநீர்...

பிந்திய செய்திகள்

தினமும் இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழம் சாப்பிடுங்க

பேரிச்சம் பழத்தில் அதிகளவில் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் வலிமைக்கு இன்மையாதவை. அதோடு இது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. பேரிச்சம் பழத்தை...

சுவடுகள் 26 | காதல் திருவிழா | டாக்டர் ரி. கோபிசங்கர்

சாதகம் பொருந்தீட்டுதாம் அடுத்தது என்ன மாதிரி எண்டு புரோக்கர் கேக்க, “ தம்பி ஒருக்கா பொம்பிளையை பாக்கோணுமாம்“ எண்டு மாப்பிளையின்டை அம்மா சொன்னா....

வழக்கத்தை விட வேகமாகச் சுற்றும் பூமி

பூமி வழக்கத்தை விட வேகமாகச் சுற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் மிகக் குறுகிய நாளும் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் திகதி சராசரி தினத்தைவிட 1.59 மில்லியன் நாடி குறைவாய்...

சீன எல்லைக்கு அருகாமையில் யுத்தப் பயிற்சி

எதிர்வரும் ஒக்டோபர் 18 முதல் 31 வரையில் உத்தர்காண்டில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு யுத்தப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன. 'யுத்தபியாஸ்' என அழைக்கப்படும் இந்த யுத்தப் பயிற்சி...

எசல பெரஹராவின் தேன் பூஜை

கண்டியின் வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹராவின் முதலாவது ரந்தோலி பெரஹரா தினம் சம்பிரதாயபூர்வ தேன் காணிக்கை (தேன் பூஜை) தம்பானே ஆதிவாசிகளால் மேற்கொள்ளக்கொள்ளப்பட்டது. வரலாற்று சிறப்பு...

துயர் பகிர்வு