இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள், ரத்த சோகை கொண்டவர்கள் மிகவும் களைப்பாக உணரலாம். உடலுக்கு போதுமான பிராணவாயு கிடைக்காததே இதற்குக் காரணம். ஹைபோதைராடிசம், தூக்க பிரச்சனை, மனச்சோர்வு, உணவுப்பழக்க கோளாறு, ஹார்மோன் கோளாறு, உடல் பருமன் போன்ற மருத்துவக் காரணங்களும் இருக்கலாம். இதைக் கண்டறிய உங்கள் டாக்டரை அணுகவும். பதப்படுத்தப்பட்ட, கொழுப்புச்சத்து நிறைந்த உணவும் சோம்பலாக உணர வைக்கும்.
உற்சாக டானிக்:
தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம்-. தண்ணீர் உடலில் ரத்தத்தின் அளவை அதிகரித்து, இதயம் அதை பம்ப் செய்வதை சீராக்குகிறது. இது பிராணவாயு உங்கள் தசைகளை வந்தடைவதை விரைவாக்கி, ஆற்றலை உண்டாக்குவதையும் விரைவாக்குகிறது. மீன் எண்ணெய், கிட்னி பீன்ஸ், தழை காய்கறிகள், சாத்துக்குடி, ஆரஞ்சு, போன்ற வைட்டமின் சி கொண்ட பழங்கள் ஆகியவை இரும்புச்சத்து அளிப்பவை மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக்குபவை.
சுவாசம்
நீங்கள் தவறாக சுவாசித்துக் கொண்டிருக்கலாம். “நம்மில் பலர் மேலோட்டமாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம். இதனால் உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைப்பதில்லை. மேலும் உடலில் கரியமில வாயு அதிகமாகிறது.இதனால் களைப்பு உண்டாகும்” என்கிறார் மும்பையைச் சேர்ந்த ஆர்தோபிடிக் டாக்டர் ரத்தி ஷா.
உற்சாக டானிக்:
10 நிமிடம் பயிற்சி இது. இந்த நேரத்தில் மூச்சை நன்கு மெதுவாக உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடவும். குறைந்தது நான்கு எண்ணும் வரை மூச்சை உள்ளே வைத்திருக்க வேண்டும். “களைப்பைப் போக்க பிராணயாமம் சிறந்தது. உங்கள் வலது கை கட்டைவிரல் மூலம் வலது மூக்கை மூடிக்கொண்டு, இடது மூக்கு மூலம் ஆழமாக மூச்சை இழுக்கவும். நன்றாக மூச்சை இழுத்த பின் மோதிர விரலால் இடது பக்க மூக்கை மூடி, கட்டை விரலை எடுத்துவிட்டு வலது பக்க மூக்கு வழியே மூச்சை வெளியே விடவும். மூச்சை நன்றாக வெளியே விட்ட பின், ஆசுவாசப்படுத்துக் கொண்டு அதே மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும். இவ்வாறு 10 முறை செய்யவும்.கபல்பாட்டி பயிற்சியையும் முயற்சிக்கலாம்.இரண்டு மூக்கு வழியாகவும் மூச்சை இழுத்து, பின்னர் வயிற்றை உள்ளிழுத்தபடி மூக்கு வழியே வெளியேற்றுங்கள்.வெளியேற்றம் விரைவாகவும், குறுகியதாகவும் இருக்க வேண்டும். 30 முறை செய்து பின்னர் ஒரு நிமிடம் ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் செய்யவும்”.
நன்றி பெமினா வீட்டு மருத்துவம்