புளுஸ்பின் ஆபரேஷன் தினம் லண்டனில், காந்தி சிலையை உடைத்த சீக்கியர்கள்புளுஸ்பின் ஆபரேஷன் தினம் லண்டனில், காந்தி சிலையை உடைத்த சீக்கியர்கள்

‘புளுஸ்பின் ஆபரேஷன்’ எனப்படும் அதன் 30–வது ஆண்டு நினைவு நாள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சீக்கியர்களால் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

அதையொட்டி இங்கிலாந்தில் வாழும் சீக்கியர்கள் லண்டனில் லெய்சர்ஸ் பகுதியில் உள்ள காந்திசிலை முன்பு குவிந்தனர். அங்கு பொற்கோவிலில் நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். 1984–ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தை ஒருபோதும் மறக்க மாட்டோம். எங்களுக்கு நீதி வேண்டும் என்பன போன்ற கோஷங்களை எழுப்பினர்.

போராட்டம் நடந்தபோது திடீரென ஆவேசம் அடைந்த சிலர் அங்கிருந்த வெண்கலத்தினால் ஆன காந்தி சிலையை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது ஒரு கிரிமினல் வழக்காக கருதப்படும் என்றும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படியும் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர்