பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் அனுமதிபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் அனுமதி

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப், நாட்டை விட்டு வெளியேற சிந்து மாகாண நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது.

2007-ம் ஆண்டில் அரசியலமைப்பை இடைநிறுத்தி  அவசர நிலையை பிரகடனப்படுத்தியமை உட்பட பலவேறு குற்றங்களுக்காக  அவர்மீது தேசதுரோக வழக்கு தொடுக்கப்பட்டு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்கக் கோரி முஷாரப் தரப்பில் சிந்து மாகாண ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் முகமது அலி மசார் மற்றும் ஷாநவாஸ் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்து முஷாரப் பெயரை நீக்க பாகிஸ்தான் அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்து முஷாரப் பெயரை 15 நாட்களில் நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்