April 1, 2023 5:32 pm

இஸ்ரேலின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பாராளுமன்ற சபாநாயகரும் அமைச்சருமான ரெயுவென் றிவ்லின் இஸ்ரேலின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பாராளுமன்ற சபாநாயகரும் அமைச்சருமான ரெயுவென் றிவ்லின்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இஸ்­ரேலின் புதிய ஜனா­தி­ப­தி­யாக முன்னாள் பாரா­ளு­மன்ற சபா­நா­ய­கரும் அமைச்­ச­ரு­மான ரெயுவென் றிவ்­லினை அந்­நாட்டு பாரா­ளு­மன்றம் தெரிவு செய்­துள்­ளது.

 

செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இரண்டாம் சுற்று இர­க­சிய வாக்­கெ­டுப்­பொன்றில் றிவ்லின் நீண்ட காலம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக பதவி வகித்த மெயிர் ஷீட்­ரித்தை 53 வாக்­கு­க­ளுக்கு 63 வாக்­கு­களால் தோற்­க­டித்­துள்ளார்.
ஏற்­க­னவே 7 வருட காலம் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த ஷிமொன் பெரெஸின் (90 வயது) பதவிக் காலம் எதிர்­வரும் ஜூலை மாதம் முடி­வ­டை­வ­தை­யொட்­டியே இந்த வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது.
இஸ்­ரே­லிய ஜனா­தி­பதி பத­வி­யா­னது பெரு­ம­ளவில் வைப­வ­ரீ­தி­யான ஒன்­றாக உள்­ளது.
பலஸ்­தீ­னர்­க­ளு­ட­னான சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­களில் ஜனா­தி­ப­திக்கு முக்­கிய வகி­பாகம் எதுவும் கிடை­யாது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது
.
பிர­தமர் பெஞ்­ஜமின் நெட்டான் யாஹுவின் வலது சாரி லிகுட் கட்­சியின் உறுப்­பி­ன­ரான றிவ்லின் இஸ்­ரேலின் 10 ஆவது ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­க­வுள்ளார்.
புதிய ஜனா­தி­ப­தி­யாக தெரிவு சொய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து றிவ்லின் உரை­யாற்­று­கையில், ”இந்த தரு­ணத்­தி­லி­ருந்து நான் எந்­த­வொரு கட்­சிக்கும் உடை­மை­யா­னவன் அல்லன்.
நான் அனை­வ­ருக்கும் உடை­மை­யா­னவன். நான் இந்த நாட்­டிற்­கு­ரி­யவன்” என்று கூறினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்