ஜேர்மனி நாட்டு மக்கள் சந்தோஷ வெள்ளத்தில் ஜேர்மனி நாட்டு மக்கள் சந்தோஷ வெள்ளத்தில்

ரியோ டி-ஜெனிரோ:2014-உலககோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி .பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் உலககோப்பை கால்பந்து தொடரின் பைனலில் இன்று அர்ஜென்டினா அணியும் ஜெர்மனி அணியும் மோதியது.லத்தீன் அமெரிக்க மண்ணில் நடக்கும் இறுதி போட்டியில் விளையாடிய முதல் அணியாக ஐரோப்பா கண்டத்தின் அணியாக ஜெர்மனி விளங்கியது. அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மாரியா அணியில் இடம் பெறவில்லை.
21வது நிமிடத்தில் அர்ஜென்டினாஅணியின் ஹூகாய்ன் கோல் அடித்தார். அது நடுவரால் ஆப்சைடு என அறிவிக்கப்பட்டதால் வாய்ப்பு வீணானது. அடுத்தவாய்ப்பு 32 வது நிமிடத்தில் மீண்டும் ஹீகாய்ன் அடித்த பந்து கோல்கம்பம் அருகே பட்டு வெளியில் சென்று விட்டது.

முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

2வது பாதியில் அர்ஜென்டினா வீரர் மெஸ்சிக்கு அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. மெஸ்சி இடது காலால் அடித்த பந்து கோல் கம்பம் அருகே விலகி சென்றுவிட்டதால் மற்றொரு வாய்ப்பு வீணானது.

2வது பாதியிலும் இரு அணிவீரர்களும் கோல் ஏதும் அடிக்கவில்லை.இதனால் கூடுதலாக அரைமணி நேரம் கொடுக்கப்பட்டது.

2வது கூடுதல் நேரத்தில் 114வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கோட்சி அற்புதமாக கோல் அடிக்க ஜெர்மனி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் அர்ஜென்டினா அணி கோல் அடிக்காததால் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 4 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

 

ஆசிரியர்