December 7, 2023 2:56 am

பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும்,” என, ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி. பேச்சுபயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும்,” என, ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி. பேச்சு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பயங்கரவாதத்தை சிறு துளியளவு கூட சகித்து கொள்ள முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்க, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,” என, ‘பிரிக்ஸ்’ மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பிரேசிலின் போர்டலிசா நகரில், ‘பிரிக்ஸ்’ மாநாடு நேற்று துவங்கியது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:பயங்கரவாதம் தான், தற்போது சர்வதேச நாடுகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும், அது, சமுதாயத்துக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு கூட்டு நடவடிக்கை தேவை. இந்த விஷயத்தில், அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். பயங்கரவாதத்தை சிறு துளியளவு கூட, சகித்து கொள்ள முடியாது.இவ்வாறு, பிரதமர் பேசினார்.

பிரிக்ஸ் நாடுகளின் மேம்பாட்டுக்காக ஏற்படுத்தப்படவுள்ள வங்கியின் தலைமையிடத்தை, சீனாவின் ஷாங்காய் நகரில் அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில், இந்த வங்கியில், ‘பிரிக்ஸ்’ உறுப்பு நாடுகள் அனைத்துக்கும் சமமான பங்கு அளிக்கப்பட வேண்டும் என, இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Click Here

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்