பல நாடுகளின் தேசிய கொடிகள் அரை கம்பத்தில்பல நாடுகளின் தேசிய கொடிகள் அரை கம்பத்தில்

விமான தாக்குதலில் பலியான 298 பேருக்கு அஞ்சலி செலுத்தும்  வகையில் நேற்று பல்வேறு நாடுகளிலும் தேசிய கொடி அரை கம்பத்தில்  பறக்கவிடப்பட்டது. உக்ரைன், ஆஸ்திரேலியா, பிரிட்டன், மலேசியா  உள்ளிட்ட நாடுகளின் கொடிகள் அரை கம்பத்தில் பறந்தன. மேலும்,  கோலாம்பூர், ஆம்ஸ்டர்டாம், நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில்  மலேசிய விமான படங்களை வைத்து மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி  மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே, விமானம் நொறுங்கிய  இடத்தில் பலரது உடல்கள் முழுவதும் கருகி அடையாளம் தெரியாத  வகையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சில உடல்கள் அழுகி விடும்  நிலையில் இருப்பதாகவும் மீட்பு குழுவினர் கூறி உள்ளனர்.

ஆசிரியர்