ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், காஸாவுக்கு விரைகிறார் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், காஸாவுக்கு விரைகிறார்

இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே போர்நிறுத்தம் கொண்டு வர உதவுவதற்காக காஸாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் விரைவில் செல்லவுள்ளார். இதனிடையே, காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பலியானோரது எண்ணிக்கை 337ஆக உயர்ந்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 8ஆம் தேதி முதல் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறிவைத்து காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் விமானப்படையும், ராணுவமும் காஸா மீது இரவு பகலாக குண்டுகளை வீசி கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.

இருதரப்பினருக்கும் இடையே 12 நாள்களாக நீடித்து வரும் சண்டையால், அந்தப் பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனையடுத்து இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகளிடையே போர்நிறுத்தம் கொண்டு வருவதற்காக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், காஸாவுக்கு விரைவில் செல்லவுள்ளார்.

ஆசிரியர்