அமெரிக்காவின் புகழ் பெற்ற ஜாஸ் இசைக் கலைஞர் மறைவுஅமெரிக்காவின் புகழ் பெற்ற ஜாஸ் இசைக் கலைஞர் மறைவு

அமெரிக்காவின் புகழ் பெற்ற ஜாஸ் இசைக் கலைஞர் லியோனல் ஃபெர்போஸ், தனது 103-ஆவது வயதில் சனிக்கிழமை காலமானார்.

கடந்த வியாழக்கிழமைதான் தனது 103-ஆவது பிறந்த நாளை அவர் கொண்டாடியிருந்தார்.

ஜாஸ் இசைக்கலைஞர்களிலேயே மிக அதிக வயதுடையவர் எனக் கூறப்படும் லியோனல், கடந்த ஆண்டு வரை இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக, நியூ ஆர்லியன்ஸ் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் ஜாஸ் வாசித்து வந்துள்ளார்.

இசைக் குறிப்புகளை படிப்பதில் அவருக்கு உள்ள அபாரமான திறமை காரணமாக, பூங்காக்கள், பள்ளிகள், தேவாலயங்கள், நடன அரங்குகள் மட்டுமின்றி, சிறைச் சாலைகளில் கூட அவரது இசைக்கு அமோக வரவேற்பு இருந்து வந்தது.

ஆசிரியர்