ஜெர்மனி கால்பந்து அணிக்கு துணை கேப்டனாக இருக்கும் ஸ்வென்ஸ்ச்கர் கேப்டன் பதவிக்கு தகுதிஜெர்மனி கால்பந்து அணிக்கு துணை கேப்டனாக இருக்கும் ஸ்வென்ஸ்ச்கர் கேப்டன் பதவிக்கு தகுதி

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதிப்போட்டியில் 1–0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வென்றது.

கோப்பையுடன் நாடு திரும்பிய பிலிப் லாம் தலைமையிலான ஜெர்மனி அணிக்கு அந்நாட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் ஜெர்மனி அணி கேப்டன் பிலிப் லாம் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

உலக சாம்பியன் அந்தஸ்துடன் விடை பெறுவதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து உலக சாம்பியன் ஜெர்மனி அணியின் புதிய கேப்டன் யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெர்மனி அணியின் துணை கேப்டனாக இருக்கும் ஸ்லென்ஸ்ச்கருக்கு புதிய கேப்டனாக அதிக வாய்ப்பு இருக்கிறது. அவர் சில போட்டிகளுக்கு கேப்டனாக பணியாற்றி இருக்கிறார்.

இதனால் அவர் கேப்டன் பதவிக்கு தகுதியாக இருப்பார் என்று கருத்து நிலவுகிறது. இதேபோல இளம் வீரர்களான தாமஸ் முல்லர், ஹம்மன்ஸ் ஆகியோருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

ஆசிரியர்