பிரான்ஸ் அதிபர் 60-வது பிறந்த நாளின் போது நடிகையை மணம் முடிக்க ஏற்பாடுபிரான்ஸ் அதிபர் 60-வது பிறந்த நாளின் போது நடிகையை மணம் முடிக்க ஏற்பாடு

பிரான்ஸ் நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர், பிராங்கோயிஸ் ஹாலண்டே. அந்நாட்டின் முன்னாள் சுற்றுச் சூழல் மந்திரியாக இருந்த செகொலேன் ராயலுடன் இவர் ‘குடும்பம் நடத்திய’ போது இந்த ஜோடிகளுக்கு 4 குழந்தைகள் பிறந்தன.

அவரை கை கழுவி விட்டு, பத்திரிகையாளரான வேலரி ட்ரையெர்விய்லெர்(49) என்பவருடன் அதிபர் மாளிகையான ‘எலிசீ பேலஸ்’சில் சில ஆண்டுகள் இவர் சேர்ந்து வாழ்ந்தார். கருத்து வேறுபாடு காரணமாக அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய வேலரி ட்ரையெர்விய்லெர், ஒரு வாரத்துக்கு பிறகு பிராங்கோயிஸ் ஹாலண்டே-வை பிரிந்து விட்டதாக அறிவித்தார்.

இதற்கிடையில், பிரெஞ்சு சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பிரபல நடிகையான ஜூலி கெயெட்டுடன் பிராங்கோயிஸ் ஹாலண்டே-வை இணைத்து ஏராளமான கிசுகிசுக்களும், வதந்திகளும் உலவி வந்தன.

ஆரம்பத்தில், அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இவற்றை மறுத்து வந்த நிலையில், கடந்த வாரம் இது தொடர்பான நிருபர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் அளித்த பிராங்கோயிஸ் ஹாலண்டே, ‘ஏதும் முக்கியமான தகவல் இருந்தால், உங்களுக்கு நிச்சயம் தெரிவிப்பேன்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடவுள்ள பிராங்கோயிஸ் ஹாலண்டே, 2 குழந்தைகளுக்கு தாயான 42 வயது நடிகை ஜூலி கெயெட்-டை திருமணம் செய்துக் கொள்ளும் ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆசிரியர்