இலங்கையில் சுப்பிரமணியன் சுவாமி அதிபர் ராஜபக்சே சந்திப்பு இலங்கையில் சுப்பிரமணியன் சுவாமி அதிபர் ராஜபக்சே சந்திப்பு

இலங்கைக்கு சென்ற பா.ஜ.,மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி, நேற்று கொழும்புவில் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசினார். அப்போது இலங்கையில் போர் முடிந்த நிலையில் இந்தியாவின் பாதுகாப்பில் மிக உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.சுப்பிரமணியன் சுவாமியுடன் சென்ற குழுவினரிடம் இலங்கை அதிபர் ராஜபக்சே கடல் எல்லை மற்றும் சுற்றுப்புறசூழல் ஆய்வு ஆகியவற்றின் ஆய்வின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.இரு தரப்பு குழுவினரும் பிராந்திய முக்கியத்துவம் குறித்தும் இந்திய பெருங்கடலில் பாதுகாக்கும் முக்கிய பங்கு குறித்தும் மீனவர்கள் பிரச்னைகள் குறித்தும் பேசினர்.

இந்திய குழு வலியுறுத்தல்:இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்குபகுதியில் உளள தமிழர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளையும் மாணவர்களுக்கு தேவையான சிறந்த கல்வி வாய்ப்புகளை கொண்டு மும்மொழி தேசிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என இந்திய குழு வலியுறுத்தியது.சுப்பிரமணியன் சுவாமி உடன் தூதுக்குழுவில் சேஷாத்ரி சாரி, பா.ஜ.க., வெளியுறவு கொள்கை செயலாளர் சுரேஷ் பிரபு மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்வபன் தாஸ்குப்தா ஆகியோர் இந்திய தரப்பிலும் இலங்கை தரப்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் மற்றும் அதிபரின் ஆலோசகர் சனிமல் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆசிரியர்