இந்தியாவும், அமெரிக்காவும் சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுக்கு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பாக இந்தச் சந்திப்புகளின் போது கவனம் செலுத்தி ஆராயப்பட்டது. முக்கியமாக சிறிலங்காவின் அண்மைய நிலவரங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது, விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
