ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணம்: முதல் கண்ணீர் அஞ்சலி கூட்டத்திற்கு அழைப்பு

மினியாபொலிஸ் நகரில் பொலிஸ் கைது நடவடிக்கையின்போது மரணமடைந்த ஜார்ஜ் ஃபிலாய்ட் பெயரில் முதல் கண்ணீர் அஞ்சலி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி சுமார் 1 மணியளவில் முன்னெடுக்கப்படும் இந்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என நம்பப்படுகிறது.

ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணம் அமெரிக்கா மட்டுமின்றில் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளிலும் பெரும் கொந்தளிப்பையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்க காரணமாக அமைந்துள்ளது.

ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணத்திற்கு காரணமான நான்கு காவலர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டு, தற்போது குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ள உள்ளனர்.

ஃபிலாய்ட் மரணம் தொடர்பில் கடந்த எட்டு நாட்களாக நடந்தேறிவரும் பெரும்பான்மையான ஆர்ப்பாட்டங்கள் அமைதியாகவும், ஆனால் சில பகுதிகளில் வன்முறையாகவும் மாறியுள்ளன மற்றும் பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா கடுமையான வார்த்தைகளால் தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அதேவேளை, பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல், உணர்ச்சிமிக்க கருத்தை வெளியிட்டு, ஆர்ப்பாட்டங்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணத்திற்கு பின்னர் இதுவரை இரங்கல் கூட்டங்கள் ஏதும் முன்னெடுக்கப்படவில்லை.

மினியாபொலிஸ் நகரம் முதன்முறையாக இரங்கல் கூட்டம் ஒன்றை முன்னெடுக்க முடிவு செய்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

#Protest #Investigation #Death #அமெரிக்கா #போராட்டம் #வன்முறை #மரணம்

ஆசிரியர்