கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்குகிறது.கேட்ச் பயிற்சியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
இங்கிலாந்தில் கொரோனாவுக்கு 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கொரோனாவின் வீரியம் இன்னும் கட்டுக்குள் வராத நிலையிலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் துணிச்சலுடன் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதனால் இந்த தொடர் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.