October 4, 2023 5:20 am

இலங்கை ரக்பி மீதான விசாரணை நடத்தபடவுள்ளது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

உலக ரக்பி சம்மேளனம் எதிர்வரும் ஜூலையில் இலங்கை ரக்பி மீதான விசாரணை நடத்தப்படும் என்று  விளையாட்டுத் துறை அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

இலங்கை ரக்பி தொடர்பில் விளையாட்டுத் துறை அமைச்சு கடந்த சில மாதங்களில் எடுத்த கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்தே உலக ரக்பி சம்மேளனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

உலக ரக்பி சம்மேளனத்தால் கடந்த மே 11 ஆம் திகதி இலங்கை ரக்பி சம்மேளத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காக உலக ரக்பி சம்மேளனத்திற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆசிய ரக்பி சம்மேளனத்துடன் இணைந்து விசாரணை ஆரம்பிக்கப்படும் என்று உலக ரக்பி சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்