செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் அமெரிக்க இளைஞன் தாப் உலக சாதனை

ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் அமெரிக்க இளைஞன் தாப் உலக சாதனை

1 minutes read

ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி தகுதிகாண் ஓட்டப் போட்டியில் 20 வயதுடைய அமெரிக்க இளைஞன் ஜா’கோபே தாப் உலக சாதனை படைத்து முழு மெய்வல்லுநர் உலகையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஒரிகொன், இயூஜின் அரங்கில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேசிய கல்லூரிகள் மெய்வல்லுநர் சங்க போட்டியில் ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை ஜா’கோபே தாப் 12.75 செக்கன்களில் நிறைவு செய்து புதிய உலக சாதனை படைத்தார்.

தேசிய கல்லூரிகள் மெய்வல்லுநர் சங்க போட்டியில் கடந்த 50 வருடங்களில் உலக சாதனை படைத்த முதலாவது மெய்வல்லுநர் ஜா’கோபே தாப் ஆவார்.

இதற்கு முன்னர் அவரது சிறந்த நேரப்பெறுதி 13.01 செக்கன்களாக இருந்தது.

12.80 செக்கன்கள் என்ற முந்தைய சாதனையை ப்ரசல்ஸ் மெய்வல்லுநர் போட்டியில் 2012ஆம் ஆண்டு மற்றொரு அமெரிக்கரான ஏரிஸ் மெரிட் என்பவர் நிலைநாட்டி இருந்தார்.

நடப்பு ஒலிம்பிக் சம்பியன் க்ரான்ட் ஹொலோவே, தேசிய கல்லூரிகளுக்கான சாதனையான 12.98 செக்கன்கள் என்ற சாதயையை 2019இல் ஏற்படுத்தி இருந்தார்.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெறவுள்ள ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்ட இறுதிப் போட்டியில் தாப் பங்குபற்றவுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.