செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

1 minutes read

பீபா உலகக் கிண்ண வரலாற்றில் 1000ஆவது கால்பந்தாட்டப் போட்டியாக அமைந்த ஜப்பானுக்கும் டியூனிசியாவுக்கும் இடையிலான போட்டியில் ஜப்பான் 4 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ஈட்டியது.

மொன்டெரே விளையாட்டரங்கில் நடைபெற்ற எவ் குழு போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய ஜப்பான் இந்த வெற்றியுடன் நொக் அவுட் சுற்றுக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது. அதேவேளை இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த டியூனியா முதல் சுற்றுடன் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறுகிறது.

இந்தப் போட்டியின் 4ஆவது நிமிடத்தில் கீட்டோ நக்கமுரா பரிமாறிய பந்தை டெய்ச்சி கமாடா கோலாக்கி ஜப்பானை முன்னிலையில் இட்டார்.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் டெய்ச்சி போட்ட கோல் ஜப்பானியர் ஒருவரால் போடப்பட்ட வேகமான கோலாக பதிவானது,

போட்டியின் 31ஆவது நிமிடத்தில் அயாசே உவேடா அலாதியான கோல் ஒன்றைப் போட இடைவேளையின்போது ஜப்பான் 2 – 0 என முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் 69ஆவது நிமிடத்தில் ஜூனியா இட்டோவும் 83ஆவது நிமிடத்தில் அயாசே உவேடாவும் மேலும் 2 கோல்களைப் போட்டனர்.

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் 2 கோல்களை போட்ட முதலாவது  ஜப்பான்   வீரர் என்ற மைல்கல் சாதனையை அயாசே உவேடா நிலைநாட்டினார்.

நெதர்லாந்துக்கு இலகுவான வெற்றி

ஹூஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்ற இதே குழுவுக்கான மற்றொரு போட்டியில் சுவீடனை 5 – 1 என்ற கோல்கள் கணக்கில் நெதர்லாந்து இலகுவாக வெற்றிகொண்டது.

நெதர்லாந்து சார்பாக ப்றயன் ப்ரோபெறி (5 நி., 17நி.), கோடி கெக்போ (47 நி., 54 நி.) ஆகியோர் தலா 2 கோல்களையும்  மாற்று வீரர்  க்ரைசென்சியோ சமர்வில் (89 நி.) ஒரு கோலையும் போட்டனர்.

சுவீடன் சார்பாக அன்தனி இலங்கா (59 நி.) ஒரு கோலை போட்டார்.

நொக் அவுட் சுற்றில் ஜேர்மனி

டொரொன்டோ விளையாட்டரங்கில் நடைபெற்ற ஈ குழு போட்டியில் ஐவரி கோஸ்டிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட முன்னாள் சம்பியன் ஜேர்மனி இறுதியில் 2 – 1 என்ற கொல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியடன் இந்த வருட உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றில் விளையாட முதலாவது ஐரோப்பிய அணியாக ஜேர்மனி தகுதிபெற்றது.

ஐவரி கோஸ்ட் வீரர் ப்ரான்க் கெசி 30ஆவது நிமிடத்தில் கோல் போட்டு தனது அணியை முன்னிலையில் இட்டார்.

போட்டியின் 67ஆவது நிமிடம்வரை பின்னிலையில் இருந்த ஜெர்மனி, 68ஆவது நிமிடத்தில் டெனிஸ் உண்டாவ் மூலம் கோல் நிலையை சமப்படுத்தியது.

போட்டியின்  உபாதையீடு நேரத்தில் (90+4 நி.) மாற்று வீரர் டெனிஸ் உண்டாவ் அபார கோல் ஒன்றைப் போட்டு ஜேர்மனிக்கு பரபரப்பான வெற்றியை ஈட்டிக்கொடத்தார்.

வெற்றிதோல்வி இல்லை

கன்சாஸ் சிட்டி விளையாட்டங்கில் நடைபெற்ற குட்டித் தீவு கியூராகாஓ அணிக்கும் கால்பந்தாட்டத்திற்கு பிரசித்திபெற்ற ஈக்வடோர் அணிக்கும் இடையில் நடைபெற்ற ஈ குழ போட்டி கொல் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.