ஐரோப்பாவில் பல நாடுகளில் வரலாறு காணாத அதிக வெப்பமான காலநிலை நிலவி வருகிறது.
அதிக வெப்பம் காரணமாக பிரான்ஸில் இருவர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், உச்ச வெப்பம் காரணமாக ஸ்பெயினில் குறைந்தது நால்வர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்பெயினில் கடந்த ஜூன் மாதம் வரலாற்றில் மிக அதிகமான வெப்பம் பதிவாகிய மாதமாக காணப்படுகிறது. கவனமாய் இருக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி : அதிக வெப்பம் காரணமாக பிரான்ஸில் இருவர் உயிரிழப்பு!
கேட்டலோனியா பகுதியில் மூண்ட காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஐரோப்பாவின் பல நகரங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியதால் மின்சாரக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டது.
வெப்பத்தால் 300 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பிரான்ஸின் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, ஜெர்மனியில் நேர்மாறாக ஆலங்கட்டி மழை பொழிகிறது. அதற்குப் காலநிலை மாற்றமே காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.