செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஈழப் போரில் தமிழரை கைவிட்ட சிதம்பரம் ஊழல் வழக்கில் சிக்கி சிறை

ஈழப் போரில் தமிழரை கைவிட்ட சிதம்பரம் ஊழல் வழக்கில் சிக்கி சிறை

0 minutes read

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் சற்று முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் அவர் இன்று  முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையில் பா.சிதம்பரம் சார்பில் கபில்சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் வாதிடுகின்றனர்.  அத்துடன் சி.பி.ஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகிறார்.

ப.சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ மற்றும் அமுலாக்கத்துறை தொடர்ந்துள்ள ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்திருந்தது.

இதனையடுத்து முன் பிணைக்கோரி ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பா.சிதம்பரம் நேற்றே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.