குடிவெறியில் பெண்ணை சீண்டி வெந்நீரடி வாங்கிய ஆண்

சேலம் கொண்டலாம்பட்டி பி. நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 24வயதுடைய கூலித்தொழிலாளி ஜனார்த்தனன்.

இவர் அதே பகுதியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் என்பவரின் மகளிடம் மதுபோதையில் அத்துமீறி வந்ததாக கூறப்படுகிறது.

தூங்கவிடாமல் மது அருந்திவிட்டு குறித்த பெண்ணின் வீட்டை தட்டுவதும் அவர்களில் யாரையாவது வம்புக்கு இழுப்பதையே வாடிக்கையாக கொண்டுவந்துள்ளார்.

இந்த நிலையில் அதிகாலை சுமார் இரண்டரை மணி அளவில் ஜனார்த்தனன் மதுபோதையில் ராதாகிருஷ்ணன் வீட்டின் கதவை தட்டி மது கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

ஆத்திரமடைந்த காவியா குளிப்பதற்காக தயார் செய்து வைத்திருந்த வெந்நீரை கொதிக்கக் கொதிக்க எடுத்து வந்து ஜன்னல் வழியாக ஜனார்த்தனன் மீது வீசி உள்ளார்.

உடம்பெங்கும் சுடுதண்ணீர் பட்டதால் வலியால் துடித்தார் ஜனார்த்தனன்.

சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் குறித்த நபரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.அவசர சிகிச்சை பிரிவில் தற்போது ஜனார்த்தனன் சிகிச்சை பெற்றுவருகிறார்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாதென கூறி விடுவித்துள்ளனர்.

ஜனார்த்தனனின் குடும்பத்தாரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர்