March 26, 2023 11:05 am

வவுணதீவில் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த சகோதரர்கள் மீது தாக்குதல்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த சகோதரர்கள் மீது வவுணதீவு பொலிசாரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாண்டியடி எரிபொருள் நிலையத்தில் நேற்று இரவு உந்துருளிக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு வீடு திரும்பிய இரு சகோதரர்கள் மீதே இவ்வாறு தாககுதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் வாகனத்தை நிறுத்தி பொலிஸ் அதிகாரியொருவர் துப்பாக்கியால் அவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

காயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தபட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியார் தெரிவித்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்