செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஐந்து தினங்களுக்குப் பின்னர் Gas விநியோகம்

ஐந்து தினங்களுக்குப் பின்னர் Gas விநியோகம்

0 minutes read

புதுவருட விடுமுறை யை முன்னிட்டு கடந்த ஐந்து தினங்களாக மூடப்பட்டிருந்த லிற்றோ கேஸ் நிறுவனம் நேற்று முதல் மீண்டும் சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

அதேவேளை, சமை யல் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் தொட ர்பில் லிற்றோ கேஸ் நிறுவனத்தின் உயரதிகாரிகள் மற்றும் தனியார் எரிபொருள்  பௌஸர்கள் உரிமையாளர்கள் சங்கத்திற்கும் இடையே நேற்று விசேட பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது.

கடந்த 13ம் திகதி முதல் ஐந்து நாட்களாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை லிற்றோ கேஸ் நிறுவனம் நிறுத்தியிருந்தது. புதுவருட விடுமுறை காரணமாகவே அவ்வாறு விநியோக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்தது.

அத்துடன் லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட தெஷார ஜயசிங்க அந்த பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். எவ்வாறெனினும் தொடர்ந்தும்தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.