March 24, 2023 2:42 am

காதல் கத்தரிக்காய் | ஒரு பக்க கதை | ஜூனியர் தேஜ்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“ஹலோ…”

“சொல்லுங்க.., நான் எழுத்தாளர் நவீனன் பேசுறேன்…”

“கதிர்’ஸ் நிருபர் தேன்மொழி பேசுறேன். காதலர் தின ஸ்பெஷலுக்கு ஒரு பேட்டி எடுக்கணும்…”

“ஓ… தாராளமா…!”

“எப்ப கூப்பிடலாம்…?”

“இப்பவே நான் ஃப்ரீ தான்… காரை ஓரம் கட்டி நிறுத்திக்கறேன். நீங்க கேள்விகளைக் கேளுங்க…”

“காதலர் தினத்தைப் பற்றி உங்கள் கருத்து?”

“காதல் என்கிற உன்னதமான கான்ஸப்ட்டுக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்..!”

ஒரு மணி நேரப் பேட்டியில் காதல் குறித்து நவீனன் பேசிய ஒவ்வொன்றும் தேன்மொழிக்கு பிரமிப்பைத் தந்தன.

தேன்மொழி ஒரு முடிவுக்கு வந்தாள்.

இதைவிடச் சிறந்த தருணம் கிடைக்காது என்பதை அறிந்து 100 மீட்டருக்குப் பின்னால் காரில் உட்கார்ந்திருந்த தேன்மொழி காரிலிருந்து இறங்கி தனிமையில் அமர்ந்திருந்த இளம் எழுத்தாளர் நவீனிடம் வந்தாள்.

“நான்தான் இத்தனை நேரமும் உங்களைப் பேட்டி எடுத்த தேன்மொழி சார். காதல் ரசம் சொட்டச் சொட்ட நீங்கள் எழுதிய எல்லாக் கதைகளையும் பல முறை படிச்சவ நான். நான் உங்களை டீப்பா லவ் பண்றேன் சார்…’ஐ லவ் யூ’ என்றாள்.

நவீனன் ரௌத்ரம் ஆனான்.

“எனக்கு எங்க வீட்ல பெண் பார்த்துக்கிட்டு இருக்காங்க. இந்த காதல் கத்திரிக்காய்…இதெல்லாம் எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது… சாரி…” என்று சொல்லிவிட்டு காரை ஸ்டார்ட் செய்தான் நவீனன்.

– கதிர்ஸ் – பிப்ரவரி – 1-15-2021 

– ஜூனியர் தேஜ்

நன்றி : சிறுகதைகள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்