இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை 1991 ஆம் ஆண்டு மே மதம் ஸ்ரீபெரும்புதுவூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடு பட்ட நிலையில் தாணு என்னும் விடுதலை புலி போராளியால் தற்கொலை குண்டு தாக்குதலில் மரணித்தார் இவருடன் பலரும் அவ்விடத்தில் மரணித்தனர்.
இந்த பெரும் தாக்குதலின் பிறகு நடைபெற்ற விடயங்கள் 41 பேர் மொத்தமாக கைது செய்யப்பட்டனர். அதில் 15 பேர் விசாரணையில் இறந்தனர் 26 பேரில் 19 பேர் விடுதலை செய்ய பட்டனர்.
இறுதியாக நளினி ,முருகன், பேரறிவாளன், சாந்தன் , ரவிச்சந்திரன் , ஜெயக்குமார், ராபட் பயாஸ் ஆகிய ஏழு பேருக்கும் தூக்கு தண்டனை அறிவிக்க பட்டது .
இந்த வழக்கு தடா கோட்டுக்கு மாற்றப்பட்டது தடகோட்டின் சிறப்பு என்னவென்றால்தீர்ப்புக்கு மேன்முறையீட்டு இல்லை நேரடியாக சுப்ரிம் கோர்ட்டுக்கு செல்ல வேண்டியது தான் இந்த நிலையில் அங்கே நளினி ,முருகன்,சாந்தன் , பேரறிவாளன் , 4 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்க பட்டது ராபர்ட் , ஜெய்குமாருக்கு, ரவிஷந்திரனுக்கு தூக்கு ஆயுள் என தண்டனை வழங்க பட்டது.
இவர்கள் தூக்கில் இருந்து தப்ப பல பாரிய ஒரு சட்டம் போராட்டம் கருணை மனுக்கள் நீண்ட நெடும் வழக்கு என்று நடந்து 32 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை அறிவிப்புகள் காதில் வர ஆரம்பித்தன அதிலும் முதலில் 2022 மே மாதம் 18 ஆம் திகதி சுப்ரிம் கோர்ட்டில் இருந்து பேரறிவாளனுக்கு முதல் விடுதலை அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நளினிக்கு 10 மாத பரோல் கிடைத்தது. நேற்றைய தினம் நளினி, முருகன், சாந்தன், ரப்பர் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியவருக்கும் விடுதலை என்று அறிவிக்க பட்டத்தை காங்கிரஸ் காட்சி முற்றிலுமா எதிர்த்தது.
மேலும் காங்கிரஸ் கட்சி கோர்ட்டின் உத்தரவு மனதையும் மனசாட்ச்சியையும் உலுக்குகிறது என்று அறிக்கை விடுத்தது
இதில் சோனியாகாந்தியின் கருணை உள்ளம் எங்கள் கட்சி சாராது என்றும் குறிப்பிடபட்டது.
உச்ச நீதி மன்றத்தின் உத்தரவை தொடர்ந்து மதுரை சிறையில் இருந்து முதலில் ரவிச்சந்திரன் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்டவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.
“துயரம் எனக்கானது என்றும் மகிழ்ச்சி தமிழ் கூறும் நல் உலகம் அனைவருக்குமானது ஏழு பேர் விடுதலைக்காக உயிர் நீத்த செங்கொடி தியாகத்தை நினைவு கூறுவதாகவும் . நீண்ட நெடிய வழக்கில் பாடு பட்ட அனைத்து நாள் உள்ளங்களுக்கும் நன்றி கூறினார்.
அடுத்து விடுதலை செய்யப்பட்ட இலங்கையை சார்ந்த முருகன் , சாந்தன், ஜெயக்குமார் , ராபர்ட் பயாஸ் ஆகியோர் திருச்சி புதுக்கோட்டையில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர் .
விடுதலை செய்யப்பட்டாலும் வெளிநாட்டவர் என்பதால் இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளதாக கால் துறை அதிகாரி கூறியுள்ளார்
இவர்கள் விருப்பப்படி இவர்கள் சொந்த நாட்டுக்கோ அல்லது வெளிநாட்டவர் என்ற பேரில் இந்தியாவிலோ வசிக்கலாம் என்றும் தமிழக முகாம்களில் தங்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
எது இருப்பினும் விரைவில் அவர்கள் விடுபடுவார்கள்
அடுத்து விடுவிக்க பட்டவர்காளில் ஒருவர் நளினி இவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் எங்களை மறக்காமல் இருந்த தமிழக உள்ளங்களுக்கு நன்றி என்றும் பொதுவாழ்க்கையில் தான் ஈடு பட போவதில்லை என்றும் லண்டனில் உள்ள தனது மக்களுடன் சென்று வாசிக்க போவதாகவும் மேலும் தமிழக அரசு மத்திய அரசுக்கும் நன்றியும் தெரிவித்து உள்ளார். தமது விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி கூறினார்.