May 31, 2023 6:00 pm

மைத்திரியின் மேன்முறையீடு நிராகரிப்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை 21 ஆயிரம் ரூபா கட்டணத்துக்கு உட்பட்டு நிராகரிக்குமாறு மேல் மாகாண குடியியில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சஞ்சீவ மொரேஸ் மற்றும் பிராங்க் குணவர்தன ஆகிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிராகரித்து அந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மைத்திரிபால சிறிசேன இந்த மேன்முறையீடை தாக்கல் செய்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலைத் தடுக்கப் போதிய புலனாய்வுத் தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 108 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்