June 5, 2023 10:41 am

16 மாணவிகள் துஷ்பிரயோகம்: ஆசிரியருக்கு மறியல் நீடிப்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கினார் எனக் கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (26) களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் 16 பாடசாலை மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கினார் எனக் கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் களுத்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்தால் கடந்த 11ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குறித்த ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

களுத்துறை வடக்கு – காலி வீதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகநபரான ஆசிரியர், மாணவிகளைத் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கணவரின் மடிக்கணினியைப் பரிசோதித்த போது அதில் மாணவிகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் காணொளிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது என்று சந்தேகநபரான ஆசிரியரின் மனைவி சம்பந்தப்பட்ட மாணவிகளில் சிலரின் பெற்றோருக்கு அறிவித்திருந்தார்.

இதையடுத்து, குறித்த பெற்றோர்கள் மூலமாக களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, தலைமறைவாகியிருந்த சந்தேகநபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்