September 22, 2023 2:42 am

முல்லைத்தீவைச் சேர்ந்த இருவர் போதை மாத்திரைகளுடன் சிக்கினர்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

முல்லைத்தீவைச் சேர்ந்த இருவர் பேலியகொடையில் வைத்து 400 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, பேலியகொடை, துட்டகைமுனு பிரதேசத்தில் நேற்று இரண்டு சுற்றிவளைப்பு தேடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, போதையூட்டும் குளிசைகள் 400 ஐ வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

28 வயதான இருவரும் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்