செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பேராதனைப் பல்கலையிலும் யாழ். மாணவன் ஒருவர் சடலமாக மீட்பு!

பேராதனைப் பல்கலையிலும் யாழ். மாணவன் ஒருவர் சடலமாக மீட்பு!

0 minutes read

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவன் ஒருவர் இன்று காலை பல்கலைக்கழகத்துக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பேராதனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், தென்மராட்சி – வரணியைச் சேர்ந்த நற்குணராசா குகதீஸ் என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொறியியல் பீட மாணவர்கள் தங்கும் அக்பர் மண்டபத்தில் அவர் தங்கியிருந்த அறையின் கழிவறையில் அவரது சடலம் தூக்கில் தொங்குவதைப் பார்த்த மாணவர்கள் பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகமும் பேராதனைப் பொலிஸாரும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.