December 4, 2023 6:48 am

“13” நிறைவேற இடமில்லை! – மொட்டு எம்.பி. திட்டவட்டம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்குத் தென்னிலங்கையில் கடும் எதிர்ப்புக் காணப்படும் பின்னணியில் அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும், நாடாளுமன்றமே அதைத் தீர்மானிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வக்கட்சி மாநாட்டில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தமிழர்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் பிரச்சினை உள்ளது. ஒரு தரப்பினரது பிரச்சினைக்கு அரசமைப்பு ஊடாக மாத்திரம் எவ்வாறு தீர்வு காண்பது?

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதைக் காட்டிலும் புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

69 இலட்சம் மக்களின் கோரிக்கை புதிய அரசமைப்பை மையப்படுத்தியதாக உள்ளது. ஆகவே, புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது திருத்தம் தேவையற்றதாக்கப்படும்.” – என்றார்.

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்