September 25, 2023 8:35 am

யாழ். பல்கலையில் கல்வி கற்கும் சிங்கள மாணவன் கத்தியுடன் கைது!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவன் ஒருவர் கத்தியுடன் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக நிலையம் ஒன்றுக்குக் கத்தியுடன் சென்று வர்த்தக நிலையத்தில் வேலை செய்பவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பில் வர்த்தக நிலைய உரிமையாளரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மாணவனைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவனைக் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்