October 2, 2023 6:03 pm

தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளைக்குப் புதிய நிர்வாகத் தெரிவு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளைக்குப் புதிய நிர்வாகத் தெரிவு இன்று நடைபெற்றது.

கட்சியின் நிர்வாகச் செயலாளர் சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம் தலைமையில் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேசக் கிளைகளினதும் நிர்வாகிகளின் பிரசன்னத்தோடு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளையின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும், செயலாளராக சூசையப்பு துரமும், பொருளாளராக முன்னாள் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் பரஞ்சோதியும், துணைத் தலைவராக மாந்தை மேற்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜெயக்குமாரும், துணைச் செயலாளராக செல்வராணி சோசையும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

அதேவேளை, மாவட்டக் கிளையின் செயற்குழு உறுப்பினர்களாக 10 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்