செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முல்லைத்தீவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகத்திற்கு சீல்

முல்லைத்தீவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகத்திற்கு சீல்

0 minutes read

முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முள்ளியவளை பகுதியில், பொது சுகாதார பரிசோதகர்களின் அதிரடி நடவடிக்கையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகம் ஒன்று சீல் வைக்கப்பட்டது.

மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள குறித்த உணவகம் சுகாதார விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பொது சுகாதார பரிசோதகரால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு உணவக நிர்வாகம் சார்பில் எவரும் முன்னிலையாகாத காரணத்தால், உணவகத்தை சீல் செய்வதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொது சுகாதார பரிசோதகர்கள், நீதிமன்ற உத்தரவின் பேரில் உணவகத்தை சீல் வைத்தனர்.

பொது சுகாதார விதிமுறைகளை பின்பற்ற தவறும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்திலும் இதுபோன்ற திடீர் சோதனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.