செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் காலமானார்

0 minutes read

இலங்கையின் மிக முக்கிய மற்றும் சிரேஷ்ட ஆங்கில ஊடகவியலாளரும், அரசியல் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் காலமானார்.

இத்தகவலை அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

இலங்கை அரசியல், இனப்பிரச்சினை, புவிசார் அரசியல் மற்றும் தமிழ் சினிமா குறித்து பல தசாப்தங்களாக ஆழமான, காத்திரமான அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வந்த அவர், சர்வதேச அளவில் வாசகர்களைக் கொண்டவர் ஆவார்.

‘தி ஐலண்ட்’ (The Island), ‘டெய்லி மிரர்’ (Daily Mirror), ‘டெய்லி எஃப்.டி’ (Daily FT) உள்ளிட்ட முன்னணி ஆங்கில நாளிதழ்களில் நீண்டகாலமாக பத்திகளை எழுதி வந்ததோடு, தனது பிரத்தியேக அரசியல் இணையத்தளத்தினூடாகவும் (dbsjeyaraj.com) தொடர்ச்சியாக எழுதி வந்தார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் குறித்த விபரங்கள் குடும்பத்தினரால் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.