ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தையும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்துள்ளது.
9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் நேற்றுமுன்தினம் ஆரம்பமானது. அரசின் கொள்கைத் திட்டத்தை முன்வைத்து ஜனாதிபதி உரையாற்றினார். ஜனாதிபதியின் இந்த அக்கிராசன உரையை சஜித் அணி புறக்கணித்திருந்தது. சபைக்கு வரவில்லை.
இந்நிலையில் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதம் நேற்று ஆரம்பமானது. நேற்றைய சபை அமர்விலும் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்கவில்லை. அதேவேளை, இன்றைய அமர்விலும் பங்கேற்கமாட்டோம் என்று சஜித்தின் கட்சி அறிவித்துள்ளது.
எனினும், ஜனாதிபதியின் உரையை எதிர்த்து சபையில் இருந்து நேற்றுமுன்தினம் வெளிநடப்பு செய்த சுதந்திர மக்கள் கூட்டணி, நேற்று விவாதத்தில் பங்கேற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.