செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பெண்ணொருவர் சுட்டுப் படுகொலை!

பெண்ணொருவர் சுட்டுப் படுகொலை!

0 minutes read

திருமணமாகிக் கணவனைப் பிரிந்து வாழ்ந்த வந்த பெண்ணொருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பொலனறுவை மாவட்டம், மெதிரிகிரிய பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டில் மிரிசேன மீனவ கிராமத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண், தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டு தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, ​​அவரது தாய் வீட்டின் முன் மறைந்திருந்த நபர் ஒருவர் குறித்த பெண்ணை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பெண் மெதிரிகிரிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

பிரிந்து சென்ற கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மெதிரிகிரிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.